வீட்டுமனை ஒதுக்கீடு முறைகேடு விவகாரம் முன்னாள் டிஜிபி ஜாபர் சேட் மீதான அமலாக்கத்துறை வழக்கு ரத்து: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் ஓய்வுபெற்ற காவல் துறை அதிகாரி ஜாபர் சேட் மீது அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கடந்த 2006-2011ம் ஆண்டுகளில் சென்னை திருவான்மியூரில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய வீட்டுமனையை முறைகேடாகப் பெற்றதாக ஓய்வுபெற்ற காவல் துறை அதிகாரி ஜாபர் சேட், அவரது மனைவி உள்ளிட்டோருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறை 2011ம் ஆண்டு ஊழல் வழக்கு பதிவு செய்தது.

இந்த வழக்கின் அடிப்படையில், சட்ட விரோத பணப்பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ், ஜாபர் சேட் மீது அமலாக்கத் துறை 2020ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தது.இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி ஜாபர் சேட் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். மனுவில், தனக்கு எதிரான ஊழல் வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் 2019ம் ஆண்டு ரத்து செய்துள்ளது. இந்த நிலையில், அமலாக்கத் துறை வழக்கை தொடர்ந்து நடத்த அனுமதிக்கக் கூடாது.

தனது மனைவிக்கு எதிராக அமலாக்கத் துறை பதிந்த வழக்கு ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், தன் மீதான வழக்கையும் ரத்து செய்ய வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் வி.சிவஞானம் ஆகியோர் அடங்கிய அமர்வு, ஜாபர் சேட்டுக்கு எதிரான ஊழல் வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளதால், உச்ச நீதிமன்ற
உத்தரவின் படி அமலாக்கதுறை பதிவு செய்த வழக்கை தொடர்ந்து விசாரிக்க முடியாது எனக் கூறி அவருக்கு எதிராக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது.

The post வீட்டுமனை ஒதுக்கீடு முறைகேடு விவகாரம் முன்னாள் டிஜிபி ஜாபர் சேட் மீதான அமலாக்கத்துறை வழக்கு ரத்து: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: