குறிஞ்சி பயிற்சி மைய மாணவர்கள் சாதனை

நாமக்கல், ஆக.22: தமிழககத்தில் மருத்துவ படிப்பில் மாணவ, மாணவிகள் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் நீட் தேர்வில் மாணவ, மாணவிகள் பெற்ற மதிப்பெண்ணை அடிப்படையாக வைத்து வெளியிடப்பட்டுள்ளது. இதில், அரசு பள்ளிகளில் படித்து மருத்துவ படிப்பிற்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டுக்கான தரவரிசை பட்டியலில், நாமக்கல் குறிஞ்சி நீட் அகாடமி பயிற்சி மையத்தில் பயின்ற திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த அரசு பள்ளி மாணவி அனுஷியா 665 மதிப்பெண் பெற்று மாநில அளவில் 3ம் இடத்தையும், நாமக்கல் மாவட்டத்தில் அரசு பள்ளியில் பயின்ற மாணவன் ரத்தீஷ் 665 மதிப்பெண் பெற்று மாநில அளவில் 4ம் இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளனர். மேலும் இந்த பயிற்சி மையத்தில் பயின்ற பல மாணவர்கள், அதிக மதிப்பெண் பெற்று மருத்துவ படிப்பில் சேர தகுதி பெற்றுள்ளனர். மாணவ, மாணவியரை குறிஞ்சி கல்வி நிறுவனங்களின் தாளாளர் மற்றும் இயக்குநர்கள் பாராட்டி பரிசு வழங்கினர்.

The post குறிஞ்சி பயிற்சி மைய மாணவர்கள் சாதனை appeared first on Dinakaran.

Related Stories: