ஈரோடு வைராபாளையம் குப்பை க்கிடங்கில் ரூ.1.75 கோடியில் எரியூட்டும் இயந்திரம்

 

ஈரோடு, ஆக. 21: ஈரோடு வைராபாளையத்தில் உள்ள குப்பை கிடங்கில் ரூ.1.75 கோடி மதிப்பில் அமைக்கப்படும் எரியூட்டும் இயந்திரத்தை மாநகராட்சி ஆணையாளர் மனிஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஈரோடு மாநகராட்சியில் 4 மண்டலங்களில் உள்ள 60 வார்டுகளிலும் பொதுமக்களிடம் இருந்து தூய்மை பணியாளர்கள் பெறும் மக்கும், மக்காத குப்பைகளை சுமார் 70 டன் முதல் 80 டன் வரை தினந்தோறும் சேகரித்து வருகின்றனர்.

இதில், மக்காத குப்பைகளை வெண்டிபாளையம் குப்பை கிடங்கிற்கும், வைராபாளையம் குப்பை கிடங்கிற்கும், மக்கும் குப்பைகளை 21 இடங்களில் செயல்படும் நுண் உரமாக்கும் மையத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதில், நுண் உர மாக்கும் மையத்தில் கிடைக்கும் 20 டன் உரங்களை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதில், ஈரோடு வைராபாளையத்தில் மக்காத ரூ.1.60 கோடி மதிப்பிலான எரியூட்டும் மையம் இயந்திரத்தின் மூலம் குப்பைகள் 950 டிகிரி வெப்பத்தில் எரியூட்டப்பட்டு, கூழ்மமாக மாற்றப்பட்டு அழிக்கப்படுகிறது.

இதே மையத்தில் தற்போது கூடுதலாக ரூ.1.75 கோடி மதிப்பில் எரியூட்டும் இயந்திரம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.  இந்நிலையில், மாநகராட்சி ஆணையாளர் மனிஷ் நேற்று வைராபாளையம் குப்பை கிடங்கில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, எரியூட்டும் இயந்திரத்தின் பணி, கூடுதலாக அமைக்கப்படும். மேலும், எரியூட்டும் இயந்திரம் கட்டுமான பணிகளை நேரில் பார்வையிட்ட இயந்திரம் கட்டுமான பணிகளை இந்த மாத இறுதிக்குள் நிறைவு செய்திட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது, மாநகராட்சி துணை ஆணையர் சரவணக்குமார், தலைமை பொறியாளர் விஜயகுமார் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

The post ஈரோடு வைராபாளையம் குப்பை க்கிடங்கில் ரூ.1.75 கோடியில் எரியூட்டும் இயந்திரம் appeared first on Dinakaran.

Related Stories: