₹12.19 லட்சத்திற்கு பருத்தி, எள் விற்பனை

திருச்செங்கோடு, ஆக. 21: திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில், வாராந்திர பருத்தி விற்பனை நடந்தது. இதில் 200 மூட்டை பருத்தி ₹10.87 லட்சத்திற்கு விற்பனையானது. பருத்தி ரகங்களை முசிறி புதுப்பட்டி, வடக்கு நல்லியம்பட்டி, தெற்கு நல்லியம்பட்டி, தண்டலை, திருத்தலையூர், சேங்கணம், ராசிபுரம், கதிரா நல்லூர், புதுச்சத்திரம், துறையூர், அம்மம்பாளையம், மருவத்தூர் போன்ற பகுதிகளிலிருந்து விவசாயிகள் கொண்டு வந்தனர். பிடி காட்டன் குவிண்டால் ₹5160 முதல் ₹7529 வரை விற்பனையானது. எள் 12 மூட்டை ₹1.32 லட்சத்திற்கு விற்பனையானது. கருப்பு எள் கிலோ ₹137.20 முதல் 151.50 வரை விற்பனையானது.

The post ₹12.19 லட்சத்திற்கு பருத்தி, எள் விற்பனை appeared first on Dinakaran.

Related Stories: