அடையாறு மண்டல பகுதிகளில் ரூ.1.1 கோடியில் நிழற்குடை பல்நோக்கு கட்டிடங்கள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்

சென்னை: அடையாறு மண்டலத்தில் கட்டப்பட்ட பல்நோக்கு கட்டிடங்கள் மற்றும் பேருந்து நிறுத்த நிழற்குடையை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். அடையாறு மண்டலம், 172வது வார்டு, கன்னிகாபுரம், வேளச்சேரி பிரதான சாலையில் மாமன்ற உறுப்பினர் வார்டு மேம்பாட்டு திட்ட நிதி ரூ.30 லட்சத்தில் கட்டப்பட்ட பல்நோக்கு கட்டிடத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். தொடர்ந்து, மாமன்ற உறுப்பினர் வார்டு மேம்பாட்டு திட்ட நிதியின் கீழ், 175வது வார்டுக்கு உட்பட்ட தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு காலனி, 3வது அவென்யூவில் ரூ.30 லட்சத்தில் கட்டப்பட்ட பல்நோக்கு கட்டிடம், கக்கன் நகர் 3வது குறுக்குத் தெருவில் ரூ.30 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட பல்நோக்குக் கட்டிடம், கக்கன் நகர் பிரதான சாலையில் ரூ.11.20 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட பேருந்து நிறுத்த நிழற்குடை ஆகியவற்றை பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். நிகழ்ச்சிகளில் மேயர் பிரியா, தென்சென்னை எம்பி தமிழச்சி தங்கபாண்டியன், வேளச்சேரி எம்எல்ஏ அசன் மவுலானா, துணை மேயர் மகேஷ்குமார், மண்டலக்குழுத் தலைவர் துரைராஜ், மாமன்ற உறுப்பினர்கள் மகேஸ்வரி முருகவேல், ஆனந்தம், மணிமாறன், பாஸ்கரன் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.

The post அடையாறு மண்டல பகுதிகளில் ரூ.1.1 கோடியில் நிழற்குடை பல்நோக்கு கட்டிடங்கள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: