தொடர்ந்து நிருபர்களிடம் அமைச்சர் கூறியதாவது:
பொதுவாகவே ஒரு நாட்டின் பசுமை பரப்பு என்பது, 33 சதவிகிதம் இருக்க வேண்டும். ஆனால் தமிழ்நாட்டில் பசுமை பசுமைப் பரப்பு என்பது 23.77 சதவிகிதம் இருக்கிறது. இந்த பரப்பை 10 ஆண்டுகளுக்குள் 25 சதவிகிதமாக உயர்த்துவோம் என்று அறிவித்தார்கள். எல்லோரும் 2.23 சதவிகிதம் உயர்த்துவதற்கு 10 ஆண்டுகளா என வியப்படைந்தார்கள். ஆனால் 2.23 சதவிகிதம் என்பது 7.5 லட்சம் ஹெக்டேரில் பசுமை பரப்பை உருவாக்குவது. இந்த பரப்பில் வனபரப்பை உருவாக்கினால்தான், 2.23 சதவிகிதத்தை அடைய முடியும். எனவே தான் இந்தத் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தொடங்கியதற்குப் பிறகு, 10 ஆண்டுகளில் 33 சதவிகிதத்திற்கு வனப்பரப்பை உயர்த்துவோம் என்கிற வகையில் திட்டங்களைத் தீட்டி அந்த வகையில் 260 கோடி மரங்கள் நடப்படும் என்பதை முதல்வர் அறிவித்தார். இந்தச் செய்தியை மக்கள், மாணவர்கள் மனதில் நிறுத்திக்கொள்ள வேண்டும். 90 கோடி மரங்கள் தமிழ்நாட்டில் இருக்கிற 11,729 சதுர கிலோமீட்டர் வனபரப்பில் நடப்பட வேண்டும். மீதமிருக்கிற காலியிடங்கள், விவசாய நிலங்கள், இந்த இடங்களில் நடப்பட வேண்டிய மரங்களின் எண்ணிக்கை 175 கோடி.
வனங்களைத் தவிர்த்த மற்ற இடங்களிலும் நட வேண்டும் என்கிற இலக்கு நிர்ணயித்து, கடந்தாண்டு மட்டும் தமிழ்நாட்டில் 2 கோடியே 80 லட்சம் மரக்கன்றுகள் நட்டு சாதனைப் படைத்திருக்கிறார்கள். இலக்கை அடைய இயற்கை மீது ஆர்வம் கொண்ட பொதுமக்கள் அனைவரும் அரசுடன் இணைந்து இதை செயல்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதனை தொடர்ந்து, சென்னை, தேனாம்பேட்டை, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை இயக்குநரகத்தில், தேசிய நலவாழ்வு குழுமம் மற்றும் டைப்1 நீரிழிவு நோய் அமைப்புடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் பரிமாறிக் கொள்ளப்பட்டது. பின்னர் டைப் -1 நீரிழிவு நோய்க்கான விழிப்புணர்வு கையேட்டினை வெளியிட்டு டைப் -1 நீரழிவு நோய்க்கான இணைய பதிவேட்டினை தொடங்கி வைத்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமை உரையாற்றினார்.
The post கடந்த ஓராண்டில் அரசின் சார்பில் 2.80 கோடி மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் appeared first on Dinakaran.