சென்னை: அதிமுக தலைமை கழகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்ற தொகுதி வாரியாக தொடர் பிரசார சூறாவளி சுற்றுப்பயணங்களை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், அதன் தொடர்ச்சியாக வருகிற ஜனவரி 4ம் தேதி (ஞாயிறு) வீரபாண்டி சட்டமன்ற தொகுதி (சேலம் புறநகர் மாவட்டம்), 5ம் தேதி (திங்கள்) கள்ளக்குறிச்சி மாவட்ட மகளிர் அணி எழுச்சி பொதுக்கூட்டம் ஆகிய இடங்களில் நடைபெற்ற உள்ள பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார்.
சம்பந்தப்பட்ட அதிமுக மாவட்ட செயலாளர்கள், பொதுக்கூட்டங்களுக்கான ஏற்பாடுகள சிறப்பான முறையில் செய்திட வேண்டும். இந்த பயணத்தின்போது மாவட்ட செயலாளர்கள், தலைமை கழக செயலாளர்கள், எம்எல்ஏக்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
