இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று (14ம் தேதி) சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில் கையெழுத்திடப்பட்டது.
இந்த கூட்டமைப்பு, பெண்கள் அதிக அளவில் பணிபுரியும் துணி நூல் மற்றும் ஆடை துறையில் உள்ள தர அங்கீகாரம் கொண்ட நிறுவனங்கள், உற்பத்தியாளர்கள், அரசு அமைப்புகள், சேவையகங்கள், தொழில் சங்கங்கள், தன்னார்வ அமைப்புகள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களை ஒன்றிணைத்து பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் பாலியல் துன்புறுத்தலுக்கு உடனடியாக எதிர்ப்பு தெரிவிக்கும் நடைமுறைகள் மற்றும் விதிமுறைகளை உருவாக்கி, அனைத்து பங்காளர்களுடன் இணைந்து, நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.
இந்த நிகழ்ச்சியில் கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறை செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை செயலாளர் ஜெய முரளீதரன், சமூக நல ஆணையர் அமுதவல்லி, ஐக்கிய நாடுகளின் பாலின சமத்துவ அமைப்பின் இந்திய நாட்டின் பிரதிநிதி சூசன் பெர்கசன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
The post துணிநூல் மற்றும் ஆடை நிறுவனங்களில் பெண்களுக்கு பாதுகாப்பான பணியிடங்களை ஊக்குவிக்கும் திட்டம்: அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் appeared first on Dinakaran.