பின்னர் வில்லங்க சான்று போட்டு பார்த்தபோது, கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்த வசந்தி என்பவர், கடந்த 4.5.2023 அன்று நான் அவருக்கு நிலத்தை செட்டில்மென்ட் செய்ததாக ஒரு போலி ஆவணம் தயார் செய்துள்ளார். பின்னர் அதே தேதியில் பிரபு மற்றும் அருண் ஆகியோருக்கு கிரையம் செய்தும் கொடுத்துள்ளார். அதற்கு சாட்சிகளாக ரூபன் மற்றும் பால்துரை ஆகியோர் கையொப்பம் செய்துள்ளனர். இந்த நிலத்தின் மொத்த மதிப்பு சுமார் ரூ.1.25 கோடி ஆகும். எனக்குச் சொந்தமான இடத்தை போலி ஆவணம் தயாரித்து அபகரித்த மேற்கண்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறியிருத்தார்.
இதனை தொடர்ந்து, ஆவடி காவல் ஆணையாளர் சங்கர் மற்றும் காவல் துணை ஆணையாளர் பி.பெருமாள் ஆகியோரின் உத்தரவின் பேரில் உதவி ஆணையர் பொன்.சங்கர், ஆய்வாளர் வள்ளி தலைமையில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். இதில் தலைமறைவாக இருந்த கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்த வசந்தி (58) மற்றும் போலி கையெழுத்து போட்ட கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த சுரேந்தரன் (51) ஆகிய இருவரையும் நேற்று போலீசார் கைது செய்தனர். பின்னர், பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி இருவரையும் புழல் சிறையில் அடைத்தனர்.
The post போலி ஆவணம் தயாரித்து ரூ.1.25 கோடி நிலம் மோசடி: பெண் உட்பட 2 பேர் கைது appeared first on Dinakaran.