பழங்குடி இன விவசாயிகளுக்கு இயந்திர நடவு மான்யம்

 

ஜெயங்கொண்டம், ஆக. 10: பழங்குடி இன விவசாயிகளுக்கு இயந்திரத்தில் நடவு மான்யம் வழங்கப்படுவதாக வேளாண் அதிகாரிகள் கூறினர். இதுகுறித்து வேளாண் மை அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அரியலூர் மாவட்டம் திருமானூர் வட்டாரத்தில் குறுவை சிறப்பு திட்டம் 24-25ன் கீழ் இயந்திர நடவு செய்த விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.4ஆயிரம் வீதம் 238.5 மற்றும் 15 ஏக்கருக்கு இலக்கீடு தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இன விவசாயிகளுக்காக பெறப்பட்டுள்ளது.

எனவே தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின விவசாயிகள், சொந்த மற்றும் குத்தகை நிலங்களில் இயந்திர நடவு செய்து இருப்பின் விடுபட்ட விவசாயிகள் வரும் ஆக-11ம் தேதிக்குள் இணையதளத்தில் பதிவு செய்யலாம். விண்ணப்பம் மற்றும் ஆவணங்களை திருமானூர் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் சமர்ப்பித்து பயனடையலாம். வேளாண்மை உதவி இயக்குனர், திருமானூர் எழில்ராணி மற்றும் வேளாண்மை இணை இயக்குனர், அரியலூர் .கணேசன் ஆகியோர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

The post பழங்குடி இன விவசாயிகளுக்கு இயந்திர நடவு மான்யம் appeared first on Dinakaran.

Related Stories: