பள்ளி வளாகத்திற்குள் லாரி புகுந்ததால் பரபரப்பு

 

திருச்சுழி, செப்.10: நரிக்குடி அருகே தாறுமாறாக ஓடிய லாரி பள்ளி வளாகத்திற்குள் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. விருதுநகரை சேர்ந்தவர் ராமர்(38). லாரி டிரைவர். இவர் நேற்று அதிகாலை விருதுநகர் அருகே உள்ள ஆர்ஆர்.நகரில் இருந்து லாரியில் சிமெண்ட் லோடு ஏற்றிக்கொண்டு ராமநாதபுரம் மாவட்டம், தேவிப்பட்டினம் நோக்கி சென்றார். நரிக்குடி அருகே மறையூர் வளைவில் வந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடி அங்குள்ள அரசு தொடக்கப்பள்ளி காம்பவுண்ட் சுவரை இடித்துக்கொண்டு உள்ளே புகுந்தது.

இதில் லாரியின் முன்பக்கம் பலத்த சேதமடைந்தது. லாரி டிரைவர் ராமருக்கு கால் முறிவு ஏற்பட்டது. தகவல் அறிந்த நரிக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து டிரைவரை மீட்டு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அதிகாலை நேரத்தில் பள்ளி வளாகத்திற்குள் லாரி புகுந்ததால் மாணவர்கள் யாரும் இல்லை. இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

The post பள்ளி வளாகத்திற்குள் லாரி புகுந்ததால் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: