திருத்துறைப்பூண்டி, செப். 10: கட்டிமேடு அரசு பள்ளியில் ஒற்றுமையை வளர்ப்போம் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கட்டிமேடு அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒற்றுமை வளர்ப்போம் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. தலைமை ஆசிரியர் மு.ச. பாலு தலைமை வகித்தார். மாணவர்கள் எடுத்த உறுதிமொழியில் ‘‘மாற்றுத்திறனாளி மாணவர்களின் கல்வியை உறுதி செய்து அவர்களுடைய எதிர்காலத்தை வளமாக்குவோம். செவித்திறன் சவால் கொண்ட மாற்றுத்திறனாளிகள் பிறருடன் சைகை மொழியில் தொடர்பு கொண்டு எண்ணங்களை பரிமாறிக் கொள்வதன் மூலம் சமூகத்தில் சமநிலை ஏற்படுகிறது.
தமிழ்நாடு பள்ளி கல்வித்துறையைச்சேர்ந்த நாங்கள் சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகளின் சமூக முன்னேற்றத்திற்காகவும் அவர்களின் நலனுக்காகவும் எப்போதும் உடன் நிற்போம் என்றும் அரசியல், சமூக, பொருளாதார பண்பாட்டுத் தளத்தில் அவர்களுக்கு இருக்கக்கூடிய சிக்கல்கள் குறித்த விழிப்புணர்வை உருவாக்க எங்களாலான அனைத்து முயற்சிகளையும் செய்வோம். மேலும் முழுமையாகவும், சமத்துவத்துடனும், வெற்றிகரமாகவும் மாற்றுத்திறனாளி குழந்தைகள் இங்கு எந்த பாகுபாடும் இன்றி அனைத்து உரிமைகளையும் பெற்று வாழ்வதற்குரிய பாதுகாப்பை அளிப்பது இன்றியமையாதது என நாங்கள் உணர்ந்திருக்கின்றோம் அவர்களை எங்கள் குடும்பத்தில் ஒருவர் போலவே முக்கியத்துவம் அளித்து நட்புணர்வை வளர்ப்போம்’’ என்றும் உறுதிமொழி ஏற்கிறோம் என்று மாணவி நவீனா உறுதி மொழியை வாசிக்க அனைத்து மாணவ, மாணவிகளும் உறுதிமொழி ஏற்றனர். நிகழ்ச்சி ஏற்பாட்டினை பள்ளி சாரண ஒருங்கிணைப்பாளர் வடிவேல் செய்திருந்தார்.
The post சிசிடிவி காட்சியை வைத்து குற்றவாளி அதிரடி கைது கட்டிமேடு அரசு பள்ளியில் appeared first on Dinakaran.