ஆடி வெள்ளி வளவனேரி கிராமத்தில் பால்குட ஊர்வலம்

 

ஜெயங்கொண்டம்,ஆக.10: ஜெயங்கொண்டம் அருகே உள்ள வளவனேரி கிராமத்தில் ஆடி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள வளவனேரி கிராமத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் ஆடி மாத வெள்ளிக்கிழமை முன்னிட்டு நேற்று வடவாற்றில் இருந்து ஏராளமான பெண்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு திரவிய பொடி, மாவு பொடி, மஞ்சள், சந்தனம், தயிர், பால், இளநீர், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கிராம முக்கியஸ்தர்கள் செய்து இருந்தனர்.

The post ஆடி வெள்ளி வளவனேரி கிராமத்தில் பால்குட ஊர்வலம் appeared first on Dinakaran.

Related Stories: