பழங்குடியின மாணவர்களுக்கு தொழில்நுட்ப பயிற்சி

புதுடெல்லி: மக்களவையில் பேசிய ஒன்றிய இணை அமைச்சர் துர்காதாஸ், பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்துடன் இணைந்து அடுத்த 3 ஆண்டுகளில் 1500 பழங்குடியின மாணவர்களுக்கு அடிப்படை பயிற்சியும், 600 பழங்குடியின மாணவர்களுக்கு செமிகன்டக்டர் தொழில்நுட்பத்தில் மேம்பட்ட பயிற்சியும் வழங்கப்படும்.

பொறியியல் பாடம் ஒன்றில் பட்டம் பெற்ற பழங்குடியின மாணவர்கள் இந்த திட்டத்தின் கீழ் பயிற்சி பெறுவதற்கு விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள். செமிகன்டக்டர் தொழில்நுட்பத்தில் பயிற்சி அளிப்பதற்காக ஐஐஎஸ்சி உட்பட 6 பெரிய நானோ மையங்களை மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் உருவாக்கியுள்ளது என்றார்.

The post பழங்குடியின மாணவர்களுக்கு தொழில்நுட்ப பயிற்சி appeared first on Dinakaran.

Related Stories: