வயநாடு: வயநாடு நிலச்சரிவில் இதுவரை 413 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் சூரல்மலை, முண்டக்கை, புஞ்சிரிமட்டம், அட்டமலை ஆகிய பகுதிகளில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டு இன்றுடன் 9 நாள் ஆனது. 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வெயில், மழை ஆகியவற்றையும் பொருட்படுத்தாமல் பெரும் சிரமங்களுக்கு இடையே இந்தப் பகுதிகளில் தினமும் உடல்களைத் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு நாளும் பல்வேறு பகுதிகளில் இருந்து உடல்களும், உடல் பாகங்களும் கிடைத்து வருகின்றன.
இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் ஏராளமானோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலச்சரிவில் சிக்கிய இன்னும் 150க்கும் மேற்பட்டோரை காணவில்லை. அவர்களது உடல்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நிலச்சரிவில் இதுவரை 413 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட 1968 பேர் 16 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post வயநாடு நிலச்சரிவு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 413 ஆக உயர்வு appeared first on Dinakaran.