வானிலைக் கண்காணிப்பு ரேடார் தமிழ்நாட்டில் புதிதாக அமைக்கப்படுமா? மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி கேள்வி

புதுடெல்லி: தமிழ்நாட்டில் உள்ள வானிலைக் கண்காணிப்பு ரேடார்கள் புதிதாக அமைக்கப்படுமா? என்று மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி கேள்வி எழுப்பினார். ஒன்றிய புவி அறிவியல் துறை அமைச்சகத்திடம் மக்களவையில் திமுக நாடாளுமன்றக் குழுத் துணைத்தலைவரும் மத்திய சென்னை எம்.பியுமான தயாநிதி மாறன் கேட்ட கேள்விகள்:
* தமிழ்நாட்டில் உள்ள வானிலைக் கண்காணிப்பு ரேடார் மற்றும் அதன் முன்னறிவிப்பு அமைப்புகளை வலுப்படுத்தும் வகையில் புதிய திட்டங்கள் அல்லது முன்முயற்சிகள் ஏதேனும் ஒன்றிய அரசாங்கத்தால் பரிசீலிக்கப்பட்டுள்ளதா எனவும் அப்படியானால், அதன் விவரங்களைத் தெரியப்படுத்தவும்.
* தமிழ்நாட்டின் வானிலை முன்னறிவிப்புகளின் காலம் மற்றும் அதன் துல்லியத்தன்மையை மேம்படுத்தவும், அதன் ஆற்றல் எல்லைகளை விரிவுபடுத்தவும் ஒன்றிய அரசிடம் ஏதேனும் திட்டங்கள் உள்ளதா?
* தமிழ்நாட்டில் தற்போதுள்ள வானிலை ரேடார் அமைப்புகளின் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவது குறித்து ஒன்றிய அரசு பரிசீலிக்கிறதா?
* கடந்த பத்து ஆண்டுகளில் வானிலை முன்னறிவிப்பு அமைப்புகளை மேம்படுத்துவதற்காக ஒவ்வொரு மாநிலத்திற்கும், குறிப்பாக தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்ட நிதி எவ்வளவு என்பதை மாநில வாரியாகப் பட்டியலிட்டுத் தெரியப்படுத்தவும்.
* நிகழ்நேர வானிலைத் தரவுகளை தமிழ்நாட்டில் உள்ள உள்ளாட்சி அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுடன் திறம்படப் பகிர்ந்து கொள்ளப்படுவதை உறுதிசெய்ய ஒன்றிய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன என கேள்வி எழுப்பினார்.

The post வானிலைக் கண்காணிப்பு ரேடார் தமிழ்நாட்டில் புதிதாக அமைக்கப்படுமா? மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி கேள்வி appeared first on Dinakaran.

Related Stories: