ஒலிம்பிக் கமிட்டி தலைவருடன் பிரதமர் மோடி பேச்சு: வினேஷ் போகத் தகுதி நீக்கம் தொடர்பாக ஒன்றிய அமைச்சர் மன்சுக் மாண்டவியா விளக்கம்

டெல்லி : ஒலிம்பிக் இறுதிப் போட்டியில் வினேஷ் போகத் தகுதி நீக்கப்பட்டது தொடர்பாக ஒன்றிய விளையாட்டுத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா மக்களவையில் விளக்கம் அளித்தார். அப்போது அவர் பேசுகையில்,”100 கிராம் எடை அதிகரிப்பால், பாரிஸ் ஒலிம்பிக்கில், இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி, ஒலிம்பிக் சங்க தலைவர் பி.டி. உஷாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். வினேஷ் போகத்துக்கு, தேவையான உதவிகளை செய்யுமாறு பிரதமர் அறிவுறுத்தி உள்ளார். மேலும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியிடம் நாங்கள் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறோம். அவர்களிடம் தகுதி நீக்கம் குறித்து மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

மல்யுத்த போட்டியில் இறுதிப் பிரிவுக்கு சென்ற ஒரே பெண் என்ற பெருமையை பெற்றார் வினேஷ் போகத். இதுவரை வீழ்த்த முடியாத வீராங்கனையாக இருந்தார் வினேஷ் போகத்.அரையிறுதி போட்டியில் உலக சாம்பியனான ஜப்பான் வீராங்கனையை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். வினேஷ் போகத்துக்கு அரசு தரப்பில் அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டது. வினேஷ் போகத்துடன் சிறப்பான கோச் மற்றும் பிசியோதெரபிஸ்டுகளை வழங்கி இருக்கிறோம். வினேஷ் போகத்தின் பயிற்சிக்கு ரூ.70 லட்சம் வரை ஒன்றிய அரசு வழங்கியுள்ளது. வினேஷ் போகத்துக்கு தேவைப்பட்டால் கூடுதல் நிதியுதவி வழங்கப்படும்,”இவ்வாறு அவர் பேசினார்.

The post ஒலிம்பிக் கமிட்டி தலைவருடன் பிரதமர் மோடி பேச்சு: வினேஷ் போகத் தகுதி நீக்கம் தொடர்பாக ஒன்றிய அமைச்சர் மன்சுக் மாண்டவியா விளக்கம் appeared first on Dinakaran.

Related Stories: