காஞ்சிபுரம் மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்கள் நடைபெறவுள்ளது என்று கலெக்டர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம் மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் என்ற திட்டத்தில் நகர்புற பகுதிகளில் முதற்கட்டமாக மாநகராட்சியில் 8 முகாம்கள், நகராட்சியில் 4 முகாம்கள், பேரூராட்சியில் 3 முகாம்கள், நகர்ப்புறத்தினை ஒட்டியுள்ள கிராம பஞ்சாயத்துகளில் 15 முகாம்கள் என மொத்தம் 30 முகாம்கள் நடத்தி முடிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, ஊராட்சி பகுதிகளில் இரண்டாம் கட்டமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஜூலை 11ம்தேதி முதல் ஆகஸ்ட் 22ம்தேதி வரை 54 முகாம்கள் 256 கிராம ஊராட்சிகளில் நடத்தப்பட உள்ளது.

அதன்படி, கடந்த மாதம் 11ம்தேதி காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூர் வட்டம் கோவூர் ஊராட்சியில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சரால், மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் தொடங்கப்பட்டு, தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், உத்திரமேரூர் வட்டம், திருப்புலிவனம் ஊராட்சியில் எம்ஜிஆர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி திருப்புலிவனம், குன்றத்தூர் வட்டம், மணிமங்கலம் ஊராட்சியில் குன்றத்தூர் வட்டம், தேவி கருமாரியம்மன் மண்டபம் மணிமங்கலத்திலும் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் இன்று (7.8.2024) நடைபெற உள்ளது.

மேலும், வாலாஜாபாத் வட்டம், வாரணவாசி ஊராட்சியில் உள்ள திருமண மண்டபம், உத்திரமேரூர் வட்டம், ஒழுகரை ஊராட்சி உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகம், திருப்பெரும்புதூர் வட்டம், மதுரமங்கலம் ஊராட்சி உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி வளாகம், குன்றத்தூர் வட்டம், மாடம்பாக்கம் ஊராட்சி உள்ள மஹாலில் நாளை (8.8.2024) நடைபெற உள்ளது. தொடர்ந்து, 9.8.2024 அன்று உத்திரமேரூர் வட்டம், ஆனம்பாக்கம் ஊராட்சி உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது. பொதுமக்கள் இம்முகாம்களை பயன்படுத்தி உரிய ஆவணங்களுடன் மனு செய்து பயனடையுமாறு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post காஞ்சிபுரம் மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் appeared first on Dinakaran.

Related Stories: