இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தநிலையில் நேற்று வாலாஜாபாத் பகுதியில் வாலாஜாபாத் தாசில்தார் கருணாகரன், காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் வாலாஜாபாத்தில் இருந்து காஞ்சிபுரம் செல்லும் கனரக லாரிகள் மற்றும் காஞ்சிபுரத்திலிருந்து வாலாஜாபாத்தை நோக்கிச் வந்த லாரிகளை ஆய்வு செய்தனர். அதில், பெரும்பாலான லாரிகளை மடக்கி ஆய்வு செய்தனர். அதில், பத்து லாரிகளில் அதிக பாரம் ஏற்றி வந்ததும், தார்ப்பாய் இன்றி லாரியை இயக்கியதும் தெரிய வந்தது. இதனை அடுத்து, பத்துக்கும் லாரிகள் மீது வழக்கு பதிவு செய்து அவர்களிடமிருந்து ரூ.6.40 லட்சம் அபராதம் விதித்தனர். மேலும், லாரி உரிமையாளர்களிடமும் ஓட்டுநர்களிடமும் லாரியை இயக்கும்போது கண்டிப்பாக அதிக பாரங்கள் ஏற்றக்கூடாது மேலும் தார்ப்பாய் இன்றி செல்லக்கூடாது என அறிவுரை வழங்கினார் மேலும் இது போன்ற ஆய்வுகள் தொடர்ந்து நடைபெறும் எனவும் வருவாய் துறை அலுவலர் மற்றும் போக்குவரத்து அலுவலர்கள் தெரிவித்தனர்.
The post வாலாஜாபாத் பகுதியில் அதிக பாரம் ஏற்றி சென்ற லாரிகளுக்கு ரூ.6.30 லட்சம் அபராதம்: அதிகாரிகள் நடவடிக்கை appeared first on Dinakaran.