சென்னை பல்லவன் இல்லத்தில் 100 புதிய பேருந்துகளை கொடியசத்து தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதிஸ்டாலின்

சென்னை: சென்னை பல்லவன் இல்லத்தில் தாழ்தளப் பேருந்துகள் உள்ளிட்ட 100 புதிய பேருந்துகளை மக்கள் பயன்பாட்டுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தானியங்கி கதவிகள், டிஜிட்டல் பலகை, சிசிடிவி கேமரா, மாற்றுத் திறனாளிகளுக்கான பிரத்தியேக இருக்கை வசதிகள் அந்த பேருந்துகளில் அமைக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகரில் மக்கள் பயணம் மேற்கொள்ள மாநகரப் பேருந்துகளே முக்கிய பங்காற்றி வருகின்றன. மக்கள் சிரமமின்றி பயணித்திட ஏதுவாக, முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி போக்குவரத்துத்துறை சார்பில் கூடுதல் பேருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.

அந்த வகையில், மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் தாழ்தளப் பேருந்துகள் உட்பட 100 புதியப் பேருந்துகளின் சேவையை சென்னை பல்லவன் இல்லத்தில் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தோம். மேலும், புதியப் பேருந்தில் சிறிது தூரம் பயணித்து, அதன் உட்கட்டமைப்பு மற்றும் தரத்தினை ஆய்வு செய்தார். இந்தப் புதியப் பேருந்துகளின் சேவை மாற்றுத்திறனாளிகள் உட்பட அனைத்து தரப்பு மக்களின் பயணங்களை எளிதாக்கட்டும்.

The post சென்னை பல்லவன் இல்லத்தில் 100 புதிய பேருந்துகளை கொடியசத்து தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதிஸ்டாலின் appeared first on Dinakaran.

Related Stories: