பெட்ரோல், டீசல் விலை குறைந்துள்ள ஒரே நாடு இந்தியா: ஒன்றிய அமைச்சர் பூரி தகவல்

புதுடெல்லி: கடந்த 3 ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் விலை குறைந்துள்ள ஒரே நாடு இந்தியா என ஒன்றிய அமைச்சர் பூரி தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் நேற்று ஒன்றிய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்து பேசினார். அப்போது, “2021 நவம்பர் முதல் 2024 ஏப்ரல் வரையில் உலகின் பெட்ரோல், டீசல் விலைகளை சொல்கிறேன். பிரான்சில் பெட்ரோல் விலை 22.19 சதவீதமும், ஜெர்மனியில் 15.28 சதவீதமும், இத்தாலியில் 14.82 சதவீதமும், ஸ்பெயினில் 16.58 சதவீதமும் பெட்ரோல் விலை அதிகரித்துள்ளது. இவை அனைத்தும் வௌியிடப்பட்ட சர்வதேச புள்ளி விவரங்கள். ஆனால் இந்தியாவில் பெட்ரோல் விலை 13.65 சதவீதமும், டீசல் விலை 10.97 சதவீதமும் குறைந்துள்ளது. 2021 நவம்பர் முதல் 2024 ஏப்ரல் வரை பெட்ரோல், டீசல் விலை குறைந்துள்ள ஒரே நாடு இந்தியாதான். இதற்கு பிரதமர் மோடி எடுத்த துணிச்சலான, லட்சியம் மிக்க தொலைநோக்கு முடிவுகளே காரணம்” என்று தெரிவித்தார்.

The post பெட்ரோல், டீசல் விலை குறைந்துள்ள ஒரே நாடு இந்தியா: ஒன்றிய அமைச்சர் பூரி தகவல் appeared first on Dinakaran.

Related Stories: