கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா: ஆகஸ்ட் 3ம் தேதி உள்ளூர் விடுமுறை

நாமக்கல்: கொல்லிமலையில் நடைபெறவுள்ள வல்வில் ஓரி விழாவினை முன்னிட்டு 3.8.2024 அன்று சனிக்கிழமை, நாமக்கல் மாவட்டத்தில் செயல்படும் அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலைப் பகுதியில் சங்க காலத்தில் புகழ்பெற்ற கடைஏழு வள்ளல்களில் ஒருவராகத் திகழ்ந்த வல்வில் ஓரி மன்னரின் வீரத்தினையும், கொடைத்தன்மையினையும் போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் 17 மற்றும் 18 ஆகிய நாள்களில் அரசு சார்பில் வல்வில் ஓரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன்படி, நடப்பு ஆண்டில் எதிர்வரும் 2.8.2024 மற்றும் 3.8.2024 ஆகிய நாள்களில் அரசின் சார்பாக வல்வில் ஓரி விழா கொண்டாடப்படவுள்ளது. இவ்விழாவிற்காக நாமக்கல் மாவட்டத்திலுள்ள பொதுமக்கள், பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ-மாணவியர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பல்வேறு துறை பணியாளர்கள் ஆகியோர் குடும்பத்துடன் கொல்லிமலைப் பகுதிக்கு வருகை புரிந்து சிறப்பிக்க உள்ளதால் எதிர்வரும், 3.8.2024 (ஆடி மாதம் 18-ஆம் நாள்) சனிக்கிழமை அன்று நாமக்கல் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது. மேலும், இந்த உள்ளூர் விடுமுறை நாளை ஈடுசெய்யும் வகையில் 17.8.2024 (சனிக்கிழமை) அன்று பணி பணி நாளாக அறிவிக்கப்படுகிறது.

மேலும், இந்த உள்ளூர் விடுமுறை நாளானது. செலாவணி முறிச் சட்டம் , 1881 (Under Negotiable Instruments Act, 1881) இன் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால், உள்ளூர் விடுமுறை நாளான 3.8.2024 அன்று மாவட்டத்தில் உள்ள கருவூலங்களும், சார்நிலைக் கருவூலங்களும் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களைக் கவனிக்கும்பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும் என
தெரிவிக்கப்படுகிறது. மேலும் இவ்விடுமுறையானது வங்கிகளுக்கு , பொருந்தாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

The post கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா: ஆகஸ்ட் 3ம் தேதி உள்ளூர் விடுமுறை appeared first on Dinakaran.

Related Stories: