இமாச்சலப் பிரதேசத்தில் அரசியல் பேராசையால் எம்எல்ஏக்கள் மீதான குதிரை பேரம் நடந்தது. அதன்மூலம் கட்டாய இடைத்தேர்தல் நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது. பாஜக தலைவர்களின் அரசியல் பேராசையால், அவசர முடிவுகளை எடுத்தனர். அவர்கள் தங்களை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இமாச்சலில் எதிர்க்கட்சி வரிசையில் அமர வேண்டும் என்பதுதான் பாஜகவுக்கு மக்கள் கொடுத்த தீர்ப்பு. அடுத்த 5 ஆண்டுகளுக்கு மாநிலத்தை ஆட்சி செய்ய காங்கிரஸுக்கு மக்கள் வாக்களித்துள்ளனர். ஆனால் பாஜக தலைவர்களின் பேராசையால் குதிரை பேரம் நடத்தப்பட்டது. இதுபோன்ற செயல்கள் மாநிலத்திற்கு நல்லதல்ல. எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்.
நாட்டின் பிரதமருக்கு அடுத்தபடியாக எதிர்க்கட்சித் தலைவர் பதவியே முக்கியமானது. உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் எதிர்க்கட்சித் தலைவரான அவர், மிகவும் பொறுப்புடன் நடந்து கொள்வது அவசியம். நீண்ட காலமாக எதிர்க்கட்சியாக இருந்த பாஜக, கடந்த காலங்களில் பொறுப்புடன் செயல்பட்டது. வாஜ்பாய் எதிர்க்கட்சி வரிசையில் இருந்தபோது, அவரை முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் ஐக்கிய நாடுகள் சபைக்கு அனுப்பி வைத்தார். ஐ.நா.வில் வாஜ்பாய் பேசியபோது, அவரது பேச்சுத்திறனை நாடே பாராட்டியது. எனவே, அடுத்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக ஆட்சிக்கு வர மக்களுடன் சேர்ந்து பணியாற்ற வேண்டும். அதுவரை பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக பாஜக நடந்து கொள்ள வேண்டும்’ என்றார்.
The post நடந்து முடிந்த மக்களவை தேர்தல் முடிவுகள் பாஜக தலைவர்களின் ஆணவத்தை அடித்து நொறுக்கியது: சொந்த கட்சியின் மாஜி முதல்வர் காட்டம் appeared first on Dinakaran.