முதல் முறையாக ₹1.5 லட்சம் கோடி வர்த்தகம்; காதி விற்பனை அதிகரிப்பால் வேலைவாய்ப்பு உருவாகிறது: பிரதமர் மோடி பெருமிதம்

புதுடெல்லி: ‘அதிகரித்து வரும் காதி, கைத்தறியின் விற்பனை, அதிகளவில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கி வருகிறது’ என பிரதமர் மோடி கூறி உள்ளார்.

பிரதமர் மோடி தனது மாதாந்திர ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சியில் நேற்று பேசியதாவது:
காதி கிராமோத்யோக்கின் வர்த்தகம் முதல் முறையாக ரூ.1.5 லட்சம் கோடியை தாண்டி உள்ளது. அதாவது காதியின் விற்பனை 400 சதவீதம் உயர்ந்துள்ளது. காதி தயாரிப்புகளை பயன்படுத்தாத பலரும் இப்போது மிகுந்த பெருமையுடன் காதி ஆடைகளை அணிகின்றனர். அதிகரித்து வரும் காதி மற்றும் கைத்தறி விற்பனை அதிக அளவில் புதிய வேலை வாய்ப்புகளையும் உருவாக்குகிறது. இத்தொழிலில் பெரும்பாலும் பெண்கள் ஈடுபட்டுள்ளதால், அவர்கள் மிகவும் பயன் அடைகிறார்கள். நீங்கள் இதுவரை காதி ஆடைகளை வாங்கவில்லை என்றால், அவற்றை வாங்கத் தொடங்குங்கள்.

பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் நமது வீரர்களை மக்கள் ஊக்கப்படுத்த வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். சமீபத்தில் கணித ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்ற நமது இந்திய மாணவர்கள் அணி 4 தங்கப் பதக்கங்களையும், ஒரு வெள்ளி பதக்கத்தையும் வென்றதுள்ளது. அவர்களுக்கு எனது பாராட்டுகள். யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னமாக அசாமில் உள்ள ‘மொய்டாம்ஸ்’ அங்கீகரிக்கப்பட்டிருப்பது குறித்து ஒவ்வொரு இந்தியரும் பெருமை கொள்ள வேண்டும்.

போதைப் பொருளை ஒழிக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவும் மனாஸ் சிறப்பு மையத்தை அரசு தொடங்கி உள்ளது. இதன் 1933 என்ற இலவச எண்ணை தொடர்பு கொண்டு மறுவாழ்வு தொடர்பான தேவையான ஆலோசனைகள் அல்லது தகவல்களையும் போதைப்பொருள் தொடர்பான தகவல்களையும் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகத்துடன் பகிர்ந்து கொள்ளலாம். இதன் அனைத்து தகவல்களும் ரகசியமாக வைத்திருக்கப்படும். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

The post முதல் முறையாக ₹1.5 லட்சம் கோடி வர்த்தகம்; காதி விற்பனை அதிகரிப்பால் வேலைவாய்ப்பு உருவாகிறது: பிரதமர் மோடி பெருமிதம் appeared first on Dinakaran.

Related Stories: