தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உட்பட 16 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உட்பட 16 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

கடந்த ஜூன் மாதத்தில் அதிகபட்ச வெப்பநிலையாக, ஜூன் 1ம் தேதி வேலூர் மாவட்டத்தில் 109 டிகிரி வெயில் பதிவானது. இந்நிலையில் மேற்கு திசையில் இருந்து வீசும் காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, வரும் 31ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதற்கிடையே, வங்கக் கடலில் மேற்குவங்கத்தை ஒட்டிய வடக்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி கடந்த 26ம் தேதி காலை உருவாகியுள்ளது.

இது மேற்கு வங்கம் மற்றும் ஜார்க்கண்ட நோக்கி மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதன் காரணமாக, மன்னார் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 65 கிமீ வேகத்தில் 30ம் தேதி வரை சூறாவளிக்காற்று வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, காஞ்சி, ராணிப்பேட்டை, திருவள்ளூர், வேலூர், தூத்துக்குடி, விருதுநகர், திருப்பூர், நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, நெல்லை, குமரி, திண்டுக்கல், ஈரோடு ஆகிய 16 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

The post தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உட்பட 16 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் appeared first on Dinakaran.

Related Stories: