பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் தொடங்கியது: இந்தியா கூட்டணி முதல்வர்கள் புறக்கணிப்பு

டெல்லி: டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது. மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பதவி ஏற்றபின்னர் முதல் நிதிஆயோக் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது. நிதி ஆயோக் கூட்டத்தில் மாநில முதல்வர்கள், ஒன்றிய அமைச்சர்கள், நிதி ஆயோக் அதிகாரிகளும் பங்கேற்றுள்ளனர்.

நிதி ஆயோக் கூட்டத்தில் அடுத்த 5 ஆண்டுகளில் மேற்கொள்ள வேண்டிய திட்டம் குறித்து ஆலோசனை நடைபெறுகிறது. நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்காமல் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் புறக்கணித்தனர். ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புறக்கணித்தார். முதலமைச்சரை தொடர்ந்து கேரளா, கர்நாடகா, பஞ்சாப், இமாச்சல் முதல்வர்களும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்துள்ளனர்.

டெல்லியில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்காமல் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி புறக்கணித்தார். நிதி ஆயோக் கூட்டத்தை ரங்கசாமி புறக்கணித்துள்ளதால் புதுச்சேரி அரசியலில் பரபரப்பு நிலவி வருகிறது.

The post பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் தொடங்கியது: இந்தியா கூட்டணி முதல்வர்கள் புறக்கணிப்பு appeared first on Dinakaran.

Related Stories: