அறிஞர்கள், படைப்பாளர்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: அறிஞர்கள், படைப்பாளர்களை ஊக்குவிக்கும் வகையில், 2024ம் ஆண்டுக்கான 5 வகை விருதுகள் மற்றும் தூயதமிழ் பற்றாளர் பரிசுக்கு தகுநிறை தமிழறிஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

* தேவநேய பாவாணர் விருது (ரூ.2 லட்சம், ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரை)

* வீரமாமுனிவர் விருது (ரூ.2 லட்சம், ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரை)

* தூயதமிழ் ஊடக விருது (அச்சு ஊடகம், காட்சி ஊடகம்) – ரூ.50 ஆயிரம், ரூ.25 ஆயிரம் மதிப்பிற்குரிய தங்கப்பதக்கம், தகுதியுரை

* பாவலர் விருது (மரபுக்கவிதை, புதுக்கவிதை) – (ரூ.50 ஆயிரம், ரூ.25 ஆயிரம் மதிப்பிற்குரிய தங்கப்பதக்கம், தகுதியுரை)

* தூயதமிழ் பற்றாளர் விருது (ரூ.20 ஆயிரம், பாராட்டு சான்றிதழ்)

* தூயதமிழ்ப் பற்றாளர் பரிசு (ரூ.5 ஆயிரம், பாராட்டு சான்றிதழ்) வழங்கப்படும்.

//sorkuvai.tn.gov.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து, நிரப்பி, இயக்குநர் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம், நகர் நிர்வாக அலுவலகக் கட்டிடம், முதல் தளம், எண்: 75, சாந்தோம் நெடுஞ்சாலை, எம்.ஆர்.சி. நகர், சென்னை – 600 028 என்ற முகவரிக்கு நேரிலோ, அஞ்சல் வழியாகவோ வரும் 30.8.2024க்குள் அனுப்ப வேண்டும்.

The post அறிஞர்கள், படைப்பாளர்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: