பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிப்பு: திமுக கண்டனம்
ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாடு என்ற பெயரே வரவில்லை.ஒன்றிய அரசு மற்ற மாநிலங்களையும் பாரபட்சமின்றி பார்க்க வேண்டும். தமிழ்நாட்டுக்கான ரயில்வே திட்டங்கள் குறித்து ஒன்றிய பட்ஜெட்டில் எதுவும் தெரிவிக்கவில்லை.
பாஜக அரசின் அணுகுமுறை முன்பைவிட மோசமாக உள்ளது”
பாஜகவின் அணுகுமுறை முன்பை விட தற்போது மிக மோசமாக உள்ளது என திமுக எம்.பி திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.
பிற மாநிலங்களை வஞ்சிப்பதை ஏற்க முடியாது: திமுக
பீகார், ஆந்திராவுக்கு கேட்டதை எல்லாம் கொடுத்துவிட்டு பிற மாநிலங்களில் வஞ்சிப்பதை ஏற்க முடியாது. குறைந்தபட்ச ஆதாரவிலை குறித்து பட்ஜெட்டில் எதுவும் இல்லை. அனைத்து மாநிலங்களையும் பாரபட்சமின்றி ஒன்றிய அரசு நடத்த வேண்டும். பாஜக அரசு அரசியல் நலனை மட்டுமே பார்க்கிறது; மக்கள் நலனை பார்க்கவில்லை. போராடி நாட்டை காக்க வேண்டிய கடமை எதிர்க்கட்சிகளிடம் இருக்கிறது.
The post பாஜகவின் அணுகுமுறை முன்பை விட தற்போது மிக மோசமாக உள்ளது: திருச்சி சிவா விமர்சனம் appeared first on Dinakaran.