இரவு நேரங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு

 

கோவை, ஜூலை 22: கோவை நகரில் சட்ட விரோத செயல்கள் அதிகரிப்பதை தடுக்கும் வகையில் கண்காணிப்பு பணி நடக்கிறது.  கடந்த காலங்களில் செயல்படாமல் சும்மா கிடந்த புறக்காவல் நிலையங்கள் பெயிண்ட் அடித்து சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. குறிப்பாக சென்சிடிவ் ஏரியாக்களான உக்கடம், கோட்டை மேடு, கரும்புக்கடை, போத்தனூர், செல்வபுரம், பூமார்க்கெட் உள்ளிட்ட பகுதியில் உள்ள புறக்காவல் நிலையங்களில் போலீசார் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர்.

சந்தேக நபர்கள் விசாரணை, வாகன சோதனை, ரோந்து பணிக்கு இந்த புறக்காவல் நிலையங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தினமும் காலை, மாலை, இரவு நேரங்களில் ரோந்து பணி நடத்தும் போலீசார் மற்றும் ஏரியா கண்காணிப்பு பணியில் உள்ள பீட் போலீசார் பணியாற்றும் வகையில் புறக்காவல் நிலையங்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

அந்த பகுதியில் வசிப்பவர்கள், ஏரியா பகுதியில் சென்று வரும் மக்கள் உடனடியாக சென்று தகவல் தெரிவிக்க, போலீசார் உடனடியாக சம்பவ இடங்களுக்கு சென்று வர புறக்காவல் நிலையங்கள் ஏதுவாக இருப்பதாக கருதப்படுகிறது. மேலும் இரவு நேரங்களில் போலீசார் முக்கிய பகுதிகளில் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். பூட்டிய வீடுகள், திருடர்கள் நடமாட்டம் உள்ளதாக சந்தேகப்படும் வகையில் போலீசார் அடிக்கடி ரோந்து சென்று வருகின்றனர். பல்வேறு இடங்களில் பூட்டிய வீடுகளை நோட்டம் விட்டு திருட திட்டமிட்ட சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

The post இரவு நேரங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு appeared first on Dinakaran.

Related Stories: