ஆம்ஸ்ட்ராங் கொலை குற்றவாளி தெரிந்தால் சொல்லட்டும் தகுதியை பற்றி பேச எடப்பாடிக்கு அருகதை இல்லை: அமைச்சர் ரகுபதி தாக்கு

புதுக்கோட்டை: ‘ஆம்ஸ்ட்ராங் கொலையில் குற்றவாளி தெரிந்திருந்தால் சொல்லட்டும்’ என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்தார். புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நேற்று இரவு நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழ்நாட்டிற்கு என்ன நிதி ஒதுக்கி உள்ளது என்பதை அண்ணாமலை கூற வேண்டும். வழக்கமாக கொடுக்கக்கூடிய தொகை தானே தவிர தமிழ்நாட்டின் கண்டு கூடுதலாக எந்தத் தொகையும் ஒன்றிய அரசு தந்ததாக தெரியவில்லை.

ஆம்ஸ்ட்ராங் கொலையில் எடப்பாடி பழனிச்சாமி உண்மையான குற்றவாளிகளை பிடிக்கவில்லை என்று தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தார். அதனால் தான் உண்மையான குற்றவாளி அவருக்கு தெரிந்திருக்கும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தான் அவருக்கு குற்றவாளி தெரிந்திருந்தால் சொல்லட்டும் என்ற அடிப்படையில் தான் நான் தெரிவித்திருந்தேன். உண்மையான குற்றவாளிகள் பிடிக்கப்படவில்லை என்று அவர் கூறுகிறார். நாங்கள் ஆதாரத்துடன் தற்போது ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் உண்மை குற்றவாளிகளை பிடித்துள்ளோம்.

வீடியோ ஆதாரம் வெளியிட்டுள்ளோம். இதற்கு பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதை சிபிசிஐடி இன்றும் புலனாய்வு செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். என்னுடைய தகுதியை பற்றி பேசுவதற்கு எடப்பாடிக்கு எந்த தகுதியும் கிடையாது. எனக்கு எல்லா தகுதியையும், எங்களுடைய தலைவர் முதலமைச்சர் தந்துள்ளார். அந்த தகுதி அடிப்படையில் தான் நான் பேசுகின்றனே தவிர என்னுடைய தகுதியை பற்றி கூறுவதற்கு எடப்பாடி பழனிச்சாமிக்கு எந்த அருகதையும் கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.

The post ஆம்ஸ்ட்ராங் கொலை குற்றவாளி தெரிந்தால் சொல்லட்டும் தகுதியை பற்றி பேச எடப்பாடிக்கு அருகதை இல்லை: அமைச்சர் ரகுபதி தாக்கு appeared first on Dinakaran.

Related Stories: