டெல்லியில் உள்ள அறியவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தின் புதிய ஆய்வு முடிவுகள் இம்மாத தொடக்கத்தில் வெளியாகி உள்ளன. அதில், இந்தியாவில் ஏற்படும் மொத்த இறப்புகளில் 7.2 சதவீதம் காற்று மாசால் ஏற்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 10 நகரங்களில் சுமார் 34,000 இறப்புகள் காற்று மாசுபாட்டுடன் தொடர்புடையவை.
இந்த புதிய ஆய்வு, தேசிய சுத்தமான காற்று திட்டத்தை (என்சிஏபி) மதிப்பீடு செய்து, காற்று மாசை கையாள்வதில் ஒன்றிய அரசின் தோல்வியை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. 15வது நிதிக் குழுவின் மானியங்கள் உட்பட என்சிஏபியின் தற்போதைய பட்ஜெட் சுமார் ரூ.10,500 கோடி. இத்திட்டத்தின் கீழ் 131 நகரங்கள் உள்ளன. எனவே ஒதுக்கப்படும் நிதி மிகவும் குறைவு. அதிலும், இந்த சொற்ப தொகையிலும் 64% மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது.
இப்படிப்பட்ட மோசமான கொள்கை உருவாக்கம், கிடைக்கக் கூடிய வளங்களை தவறாக வழிநடத்துகிறது. என்சிஏபியின் கீழ் உள்ள 131 நகரங்களில், பெரும்பாலானவற்றில் காற்று மாசுபாட்டைக் கண்டறியும் தரவு கூட இல்லை. எனவே இத்திட்டத்தில் குறைந்தபட்சம் 10-20 மடங்கு அதிக நிதி தேவை. அதாவது, ரூ.25,000 கோடி திட்டமாக இது மாற்றப்பட வேண்டும். கடந்த 10 ஆண்டுகளில் செய்யப்பட்ட மக்கள் விரோத சுற்றுச்சூழல் சட்டத் திருத்தங்களை திரும்பப் பெற வேண்டும். இந்த அம்சங்கள் வரவிருக்கும் ஒன்றிய பட்ஜெட்டில் இடம் பெற வேண்டும்.
இவ்வாறு கூறி உள்ளார்.
The post காற்று மாசுபாடு தடுப்பதில் ஒன்றிய பாஜ அரசு தோல்வி: காங்கிரஸ் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.