பசுமை ஆடை உற்பத்தி மறுசுழற்சி பயிற்சி கருத்தரங்கு

 

திருப்பூர், ஜூலை 21: திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க அரங்கில் பேர் டிரேட் இந்தியா, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் இணைந்து வளம் குன்றா வளர்ச்சி உற்பத்தி கோட்பாட்டின் கீழ் பசுமை ஆடை உற்பத்தி மறுசுழற்சி பற்றிய பயிற்சி கருத்தரங்கு நடத்தினர். இதில் அரிசோனா மாநில பல்கலைக்கழகம் மற்றும் அமிர்தா விஸ்வ வித்யா பீடத்தை சேர்ந்தவர்கள் பங்கேற்றார்கள். இதில் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க துணை தலைவர் இளங்கோவன் பேசும்போது, வளம் குன்றா வளர்ச்சி உற்பத்தி கோட்பாடுகளின் கீழ் பசுமை ஆடை உற்பத்தி மற்றும் மறுசுழற்சி ஆகியவற்றில் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் முன்னிலையில் உள்ளனர். சாயக்கழிவுகள் 96 சதவீதம் வரை மறுசுழற்சி செய்யப்பட்டு வருகிறது.

சாயக்கழிவுநீர் பூஜ்ஜிய நிலை சுத்திகரிப்பு பசுமை ஆற்றல் ஜவுளிக்கழிவு மேலாண்மை எதிர்காலத்தில் மிகவும் அவசியம் என பேசினார். பொருளாளர் கோபாலகிருஷ்ணன் பேசும்போது, திருப்பூரில் உள்ள வேலை வாய்ப்பில் 85 சதவீதம் பெண்கள் ஈடுபட்டு வரும் நிலையில் இன்னும் நிறைய வேலைவாய்ப்புகள் இருக்கிறது என்றார்.பின்னர், அம்ரிதா ஸ்கூல் ஆப் பிசினெஸ் டீன் நாவா சுப்பிரமணியம் வளம் குன்றா வளர்ச்சி கோட்பாட்டை ஊக்குவித்து வருவது குறித்து தெரிவித்தார். அரிசோனா மாநில பல்கலைக்கழகத்தின் ராஜேஷ் பச் ரிம் ஜிம் அகர்வால் ஆகியோர் ஐக்கிய நாடுகளின் எதிர்பார்ப்பு அமெரிக்கா ஐரோப்பா நாடுகளில் அமலில் வந்துள்ள சட்ட திட்டங்கள் அவை அமல்படுத்தும் காலநிலைகள் குறித்து விளக்கி கூறினர்.திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க இணை செயலாளர் குமார் துரைசாமி திருப்பூர் தொழில்துறையினர் மேற்கொண்டு வரும் வளம் குன்றா வளர்ச்சி கோட்பாடுகள் குறித்து விளக்கி கூறினார்.

 

The post பசுமை ஆடை உற்பத்தி மறுசுழற்சி பயிற்சி கருத்தரங்கு appeared first on Dinakaran.

Related Stories: