டிரம்பை எதிர்கொள்வேன் தேர்தலில் இருந்து பின்வாங்க மாட்டேன்: அடுத்த வாரம் முதல் மீண்டும் பிரசாரம் அதிபர் பைடன் திட்டவட்டம்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து விலக மாட்டேன் என்றும், அடுத்த வாரம் முதல் மீண்டும் பிரசாரத்தில் ஈடுபடஉள்ளதாகவும் அதிபர் பைடன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான பிரசாரம் தீவிரமடைந்து வருகின்றது. இந்நிலையில் ஜனநாயக கட்சியின் வேட்பாளரான அதிபர் ஜோ பைடன் திடீரென கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் டெலாவரில் உள்ள தனது வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். இதனிடையே நேரடி விவாதத்தில் செயல்பட்ட விதம் மற்றும் அவ்வப்போது உடல்நிலை பாதிக்கப்பட்டு வருவதால் அதிபர் பைடன் தேர்தலில் இருந்து விலக வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றது.

இந்நிலையில் அதிபர் பைடன் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலகப்போவதில்லை என்றும் அறிவித்துள்ளார். இது குறித்து அதிபர் பைடன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,‘‘டிரம்பின் பேச்சு எதிர்காலம் பற்றிய இருண்ட பார்வையாகும். இதற்கு பதிலடியாக நாம் அனைவரும் ஒரு கட்சியாக, நாடாக ஒன்றிணைந்து அவரை தேர்தலில் தோற்கடிப்போம். அடுத்த வாரம் தேர்தல் பிரசாரத்தில் மீண்டும் பங்கேற்று டொனால்ட் டிரம்பின் 2025 கொள்கையின் அச்சுறுத்தலைவெளிப்படுத்தும் நாளை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

 

The post டிரம்பை எதிர்கொள்வேன் தேர்தலில் இருந்து பின்வாங்க மாட்டேன்: அடுத்த வாரம் முதல் மீண்டும் பிரசாரம் அதிபர் பைடன் திட்டவட்டம் appeared first on Dinakaran.

Related Stories: