மண் எடுக்கும் நேரத்தை நீட்டிக்க வேண்டும் தென்னை விவசாயிகள் சங்கத்தினர் கலெக்டருக்கு மனு

 

திருப்பூர், ஜூலை 20: தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்க தலைவர் பரமசிவம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: உடுமலைப்பேட்டை வட்டம், திருமூர்த்தி அணையிலிருந்து வண்டல் மண் மற்றும் மண் எடுக்க அரசு உத்தரவின் பேரில் தாங்களும் உரிய நடவடிக்கை எடுத்து வட்டாட்சியர் மூலம் அனுமதி வழங்கினார். திருமூர்த்தி அணையிலிருந்து புல எண்கள்: 261, 262, 263 மற்றும் 264-ஆகியவற்றிலிருந்து 108000-கன மீட்டர் வண்டல் மண் மற்றும் மண் எடுக்க அனுமதி வழங்கி அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

ஆனால் தற்பொழுது புலம் எண்: 264-க்கு மட்டும் விண்ணப்பித்த விவசாயிகள் சிலருக்கு அனுமதி கிடைத்துள்ள நிலையில், அந்த பகுதியில் அனுமதித்த அளவு முடிந்து விட்டதாக தற்போது விவசாயிகள் விண்ணப்பிக்கும் போது பூஜ்ஜியம் என காட்டுகிறது. அது மட்டுமின்றி புலம் எண்கள்: 261,262, 263க்கும் பூஜியம் என்றே தவறுதலாக காட்டுகிறது.

எனவே, இதன் மீது தாங்கள் உரிய நடவடிக்கை எடுத்து, விவசாயிகள் தொடர்ந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து மண் எடுத்திட உதவிடுமாறு கேட்டுக் கொள்கிறோம். மேலும், மழையினால் மண் எடுக்க முடியாமல் நாட்கள் கடந்து விட்டதால், இனிமேல் மண் எடுக்கும் நேரத்தை காலை 6மணி முதல் மாலை 6மணி வரை நீட்டித்து உதவிடுமாறும் விவசாயிகள் சார்பாக கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு கூறப்பட்டிருந்தது.

The post மண் எடுக்கும் நேரத்தை நீட்டிக்க வேண்டும் தென்னை விவசாயிகள் சங்கத்தினர் கலெக்டருக்கு மனு appeared first on Dinakaran.

Related Stories: