திருப்பூர், டிச.8: பூமலரில் உள்ள பெம் ஸ்கூல் ஆப் எக்ஸலென்ஸ் பள்ளியில் கடந்த 7ம் தேதி எக்சலோரா 2025 திறன் மேம்பாட்டு போட்டி இந்த கல்வி ஆண்டின் முக்கிய நிகழ்வாக நடைபெற்றது. மாணவர்களின் திறன்களை கண்டறிந்து ஊக்குவிக்கும் நோக்கத்துடன் இந்த நிகழ்வு சிறப்பு மிக்க வகையில் நடைபெற்றது.
மழலையர் பிரிவு முதல் 8ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்காக பல்வேறு துறைகளில் போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. 100க்கும் மேற்பட்ட மாணவ -மாணவிகள் மிகுந்த உற்சாகத்துடன் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டிகளில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் பள்ளி முதல்வர்கள் தலைமையில் பாராட்டு சான்றிதழ்கள் பரிசுகள் வழங்கப்பட்டன.
