அதிகபட்சமாக குஷி ஷர்மா 36 ரன் எடுத்தார். கவிஷா 22, சமைரா 13, கேப்டன் ஈஷா 10 ரன் எடுத்தனர். 3 பேர் ரன் அவுட்டானது அமீரக அணிக்கு பின்னடைவை கொடுத்தது. நேபாளம் பந்துவீச்சில் இந்து பர்மா 3, சப்னம், கிரித்திகா தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய நேபாளம் அணி, தொடக்க வீராங்கனை சம்ஜனா கட்கா அதிரடி ஆட்டத்தால் 16.1 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 118 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
சம்ஜனா கட்கா 72 ரன் (45 பந்து, 11 பவுண்டரி), பூஜா மஹதோ 7 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். யுஏஇ பந்துவீச்சில் கவிஷா 3, லாவன்யா 1 விக்கெட் வீழ்த்தினர். சம்ஜனா கட்கா சிறந்த வீராங்கனை விருது பெற்றார். நேபாளம் அணி 2 புள்ளிகளை தட்டிச் சென்றது.
The post மகளிர் ஆசிய கோப்பை டி20 அரபு அமீரகத்தை வீழ்த்தியது நேபாளம்: சம்ஜனா அதிரடி appeared first on Dinakaran.