செய்தி துளிகள்

* சிறுத்தை தாக்குதல் ஆடு பலி: மக்கள் கவலை
சிர்வாரா தாலுகா கல்லூர் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை இரவு சிறுத்தை தாக்கியதில் ஆடுகள் உயிரிழந்தன. ரெய்ச்சூர் மாவட்டம், சிராவார் தாலுகா, கல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் பாண்டி முகமது. அவர் சம்பவத்தன்று மேய்ச்சலுக்கு பின்னர் வழக்கம் போல் ஆடுகளை கொட்டகையில் கட்டி வைத்துள்ளார். சம்பவத்தன்று இரவு ஆடுகளின் சத்தம் கேட்டு வந்த போது இரண்டு சிறுத்தைகள் அங்கிருந்து ஓடியுள்ளது. இதுகுறித்து கிராமத்தினருக்கு தகவல் தெரியவந்தது. தொடர்ந்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இச்சம்பவம் கிராம மக்களிடையே பதற்றத்தை அதிகரித்துள்ளதோடு, இனி வரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

* சேதமடைந்த சாலை ஆபத்தில் வாகன ஓட்டிகள்
பீதர் மாவட்டம், ஹுலசூர் நகரின் பசவகல்யாண்-பால்கி பிரதான சாலையை இணைக்கும் மாநில நெடுஞ்சாலையில், மழைக்காலத்தை முன்னிட்டு, ஓரிரு மாதங்களுக்கு முன், பேட்ச் ஒர்க் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் தற்போது, மீண்டும் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. இரு சக்கர வாகனங்கள் தவிர ஆட்டோ, கார்கள் ஏற்கனவே பள்ளங்களில் விழுந்து சிரமத்துடன் பயணிக்க வேண்டியுள்ளது. இந்நகரம் நாளுக்கு நாள் வளர்ச்சியடைந்து வியாபாரம் மற்றும் பரிவர்த்தனைகள் அதிகரித்து வருகிறது. மக்கள் தொகையும் அதிகரித்து வருகிறது. எல்லைக்கு அருகாமையில் உள்ளதால் வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. மெயின் ரோட்டில் ஒரு அடி ஆழத்திற்கு பள்ளங்கள் ஏற்பட்டுள்ளதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

சிறு மழை பெய்தாலும் பள்ளங்கள் நிரம்பிவிடும். இதனால் பலர் கீழே விழுந்து கை, கால் உடைந்து செல்கின்றனர். இச்சாலையில் ஏற்பட்டுள்ள குளறுபடியால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருவதுடன், பாதசாரிகள் தினமும் சேறும் சகதியுமாக மாறி வருகின்றனர். சாலையின் இருபுறமும் முட்புதர்கள் இருப்பதால் உயிரை கையில் பிடித்துக்கொண்டு நடக்க வேண்டியுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து புதர்கள் மற்றும் செடிகளை அகற்ற வேண்டும், மேலும் விரைந்து தரமான சாலையை அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

* உடைந்த காற்றாலை இயந்திரம்; பயிர் சேதம்
பல்லாரி மாவட்டம், சந்தூர் தாலுகாவில் உள்ள சோரனூர் ஹோபாலி கலிங்கேரி கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஹிரால் கிராமத்தை சேர்ந்தவர் ராமாஞ்சநேய ஷெட்டி. இவரின் பண்ணையில் காற்றாலை மின்விசிறி பொருத்தப்பட்டது. மாவட்டத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று அதிகாலை பலத்த காற்று வீசியதால் பக்கத்து வீரபத்ரப்பா என்பவரது வயலில் மின்விசிறி பழுதடைந்து விழுந்தது. இதனால் வீரபத்ரப்பாவின் மக்காச்சோள பயிர் சேதமானது. நிறுவனம் கிராமத்தின் அருகே சில மின்விசிறிகளை நிறுவியுள்ளது. சமீப நாட்களில் இப்படி உடைந்தது இது இரண்டாவது . சமீபத்தில், ஹோபாலி அக்ரஹாரா கிராம பஞ்சாயத்து பகுதியிலும் மின்விசிறி உடைந்தது குறிப்பிடத்தக்கது. சோரனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்தனர்.

The post செய்தி துளிகள் appeared first on Dinakaran.

Related Stories: