மைசூரு-மயிலாடுதுறை ரயில் கடலூர் போர்ட் வரை நீட்டிப்பு; தென்மேற்கு ரயில்வே அறிவிப்பு

பெங்களூரு: மைசூரு – மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரயில் சேவை கடலூர் போர்ட் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை – மைசூரு – மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரயில் 16231/16232 கடலூர் போர்ட் வரை நீட்டிக்கப்பட்டுள்ள இந்த ரயில் சேவை, நேற்று முதல் அமலுக்கு வந்தது. மைசூருவிலிருந்து கடலூர் போர்ட் செல்லும் ரயில் எண் 16232 ரயில் மயிலாடுதுறைக்கு காலை 6.45 மணிக்கு செல்லும். அங்கிருந்து 7 மணிக்கு புறப்பட்டு சீர்காழியை காலை 7.23 மணிக்கு சென்றடையும் ரயில், 7.24க்கு அங்கிருந்து புறப்பட்டு காலை 7.41 மணிக்கு சிதம்பரம் சென்றடையும். சிதம்பரத்திலிருந்து காலை 7.42 மணிக்கு புறப்பட்டு கடலூர் போர்ட் ரயில் நிலையத்தில் காலை 8.35 மணிக்கு சென்றடையும்.
அதேபோல, கடலூரிலிருந்து தினமும் மாலை 3.40 மணிக்கு புறப்பட்டு, 4.07 மணிக்கு சிதம்பரம் சென்றடையும். சிதம்பரத்திலிருந்து மாலை 4.08 மணிக்கு புறப்பட்டு சீர்காழிக்கு மாலை 4.23 மணிக்கு சென்றடைந்து, அங்கிருந்து 4.24 மணிக்கு புறப்பட்டு மயிலாடுதுறையை மாலை 5.30 மணிக்கு சென்றடையும். மயிலாடுதுறையில் மாலை 5.55 மணிக்கு இந்த ரயில் கிளம்பும் என்று தென்மேற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

The post மைசூரு-மயிலாடுதுறை ரயில் கடலூர் போர்ட் வரை நீட்டிப்பு; தென்மேற்கு ரயில்வே அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: