நாமக்கல், ஜூலை 19: நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: விவசாயிகளின் குறைகளை நேரில் கேட்டறிந்து நடவடிக்கை எடுப்பதற்காக, நாமக்கல் மாவட்டத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதையொட்டி இன்று (19ம் தேதி) நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு வருவாய் கோட்டங்களுக்கான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டங்கள் தனித்தனியே நடைபெறுகிறது. நாமக்கல் கோட்ட விவசாயிகள் கூட்டம், நாமக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், திருச்செங்கோடு கோட்ட விவசாயிகள் கூட்டம் திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது. நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு ஆர்டிஓ.,க்கள் தலைமை வகித்து, விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்டறிந்து நடவடிக்கை எடுப்பார்கள். கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்துகொண்டு, தங்களது பயிர் சாகுபடிக்கு தேவையான நவீன தொழில்நுட்பங்கள், வேளாண் இடுபொருள் இருப்பு விவரங்கள், வேளாண்மை உழவர் நலத்துறை திட்டங்கள் உளளிட்டவை குறித்து அறிந்து கொள்ளலாம். தவிர, தங்களது கோரிக்கைகளையும் தெரிவித்து தீர்வு பெறலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.
The post விவசாயிகள் குறைதீர் கூட்டம் appeared first on Dinakaran.