₹1.25 லட்சத்திற்கு கொப்பரை ஏலம்

திருச்செங்கோடு, அக்.26: திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் திருச்செங்கோடு தலைமையகத்தில், நேற்று கொப்பரை ஏலம் நடந்தது. இதில், சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் 30 மூட்டை கொப்பரையை ஏலத்திற்கு கொண்டு வந்தனர். முதல் தரம் கிலோ ₹100.65 முதல் ₹119.65 வரையிலும், 2ம் தரம் ₹78.75 முதல் ₹98.75 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ₹1.25 லட்சத்திற்கு கொப்பரை ஏலம் போனது.

The post ₹1.25 லட்சத்திற்கு கொப்பரை ஏலம் appeared first on Dinakaran.

Related Stories: