திருச்செங்கோடு கூட்டுறவு சங்கத்தில் ₹8.20 லட்சத்திற்கு பருத்தி ஏலம்

திருச்செங்கோடு, அக்.23: திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், வாராந்திர பருத்தி ஏலம் நேற்று நடந்தது. இதில் பருத்தி ரகங்களை முசிறி புதுப்பட்டி, வடக்கு நல்லியம்பட்டி, தெற்கு நல்லியம்பட்டி, தண்டலை, திருத்தலையூர், சேங்கணம், ராசிபுரம், கதிராநல்லூர், புதுச்சத்திரம், துறையூர், அம்மம்பாளையம், மருவத்தூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், 104 பருத்தி மூட்டைகளை ஏலத்திற்கு கொண்டு வந்தனர். இதில் பிடி ரகம் பருத்தி குவிண்டால் ₹5,100 முதல் ₹7,490 வரை விற்பனையானது. ஒட்டு மொத்தமாக விவசாயிகள் கொண்டு வந்த 104 மூட்டை பருத்தி ₹8.20 லட்சத்திற்கு பருத்தி ஏலம் போனது.

The post திருச்செங்கோடு கூட்டுறவு சங்கத்தில் ₹8.20 லட்சத்திற்கு பருத்தி ஏலம் appeared first on Dinakaran.

Related Stories: