பெற்றோர்களிடம் பிரச்னைகளை அச்சமின்றி தெரிவித்து தீர்வு பெற வேண்டும்: மாணவிகளுக்கு இன்ஸ்பெக்டர் வேண்டுகோள்

 

பெரம்பலூர், ஜூலை 18: மாணவிகள் தங்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் குறித்து பெற்றோர்களிடம் அச்சமின்றி தெரிவித்து அதற்கான தீர்வைப் பெற வேண்டும் என்று பூலாம்படி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பெரம்பலூர் மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்புப் பிரிவு இன்ஸ்பெக்டர் ஜென்னட் ஜெசிந்தா வலியுறுத்தினார். பெரம்பலூர் மாவட்ட எஸ்பி ஷ்யாம்ளாதேவி உத்தரவின்படி, பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுக்கா, பூலாம்பாடி அரசு மேல் நிலைப்பள்ளியில் பெரம்பலூர் மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைக ளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்புப் பிரிவு இன்ஸ்பெக்டர் ஜென்னட் ஜெசிந்தா, எஸ்எஸ்ஐ மருத முத்து மற்றும் டாக்டர் வனிதா (TOBACCO), கீதா (one stop center), அருணா குமாரி (சமூகநலத்துறை MS), மகேஸ்வரி (DCPU) ஆகி யோர் இணைந்து மாணவ மாணவிகளிடையே பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப் புணர்வை ஏற்படுத்தினர்.

பள்ளியின் தலைமையாசி ரியர் முருகேசன் தலைமை யில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி யில் மாணவ மாணவிகளிடம் பேசிய இன்ஸ்பெக்டர் ஜென்னட் ஜெசிந்தா பேசியதாவது: குழந்தை திருமணம், போக்சோசட்டம், கல்வியின் முக்கியத்தும், பெண் கல்வியின் அவசியம், பள்ளியில் இடைநின்ற மாணவ மாணவிகளை மீண்டும் பள்ளியில் சேர்ப்பது ஆகியவை குறித்து விரிவான விழிப் புணர்வு ஏற்படுத்தினார். ஒவ்வொரு காவல் நிலையத்திலும் செயல் படும் உதவிஎண்களான பெண்கள் உதவி மைய இலவச தொலைபேசி எண் 181, Women Help Desk எண் 112, குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை தெரிவிக்கும் எண் 1098, பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பிற்காக செயல்படும் இலவச உதவி எண் 14417, முதியோர் உதவி எண் 14567,சைபர் கிரைம் உதவி எண் 1930 குறித்தும் எடுத் துரைத்தார்.

ஒவ்வொரு மாணவிகளும் தங்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் குறித்து தங்களது பெற்றோர்களிடம் அச்சமின்றி தெரிவித்து அதற்கான தீர்வினைப் பெற வேண்டும். மாணவி கள் ஒவ்வொருவருக்கும் தொடுதல் குறித்த விழிப் புணர்வு (GOOD TOUCH BAD TOUCH) கட்டாயம் இருத்தல் வேண்டும். பெண் குழந்தை களைப் பாதுகாப்போம், பெண் குழந்தைகளைப் படிக்க வைப்போம். இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், காவல்துறையினர் மாணவ, மாணவியர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

The post பெற்றோர்களிடம் பிரச்னைகளை அச்சமின்றி தெரிவித்து தீர்வு பெற வேண்டும்: மாணவிகளுக்கு இன்ஸ்பெக்டர் வேண்டுகோள் appeared first on Dinakaran.

Related Stories: