சேதுபாஸ்கரா வேளாண் கல்லூரியில் களைகட்டிய முத்தமிழ் விழா

 

காரைக்குடி, ஜூலை 18: காரைக்குடி அருகே விசாலயன்கோட்டை கலாம்கவிநகர் சேதுபாஸ்கரா வேளாண்மை கல்லூரியில் முத்தமிழ் விழா மகிழுலா 2024 என்ற தலைப்பில் நடந்தது. கல்லூரி தாளாளர் சேதுகுமணன் வாழ்த்தினார். கல்லூரி முதல்வர் கருணாநிதி வழிகாட்டுதலுடன் நடந்தது. பேச்சாளர் கல்லல் முத்துக்குமார் சிறப்புரையாற்றினார். விழாவை முன்னிட்டு தமிழ் மொழி, தமிழர் பண்பாட்டை பறைசாற்றும் விதமாக பொங்கல் வைத்தல், முளைப்பாரி எடுத்தல், கும்மியடித்தல், பானை உடைத்தல், பரதம், உறுமியாட்டம், வில்லுப்பாட்டு, தப்பாட்டம், நாட்டுப்புறப்பாடல், பொய்க்கால் குதிரை, பொம்மலாட்ம், மயிலாட்டம், சிலம்பாட்டம் போன்ற கலைநிகழ்ச்சிகளை மாணவ, மாணவிகள் நடத்தினர். கல்லூரி துணை முதல் வர் விஷ்ணுபிரியா, இயக்குநர் ஸ்டெல்லா உள்பட 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியினைஆசிரிய ஆலோசகர் ஜெயபிரகாஷ், அக்சயா, தமிழ் மன்றத்தலைவர் யுவராஜ், கவுசல்யா ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

 

The post சேதுபாஸ்கரா வேளாண் கல்லூரியில் களைகட்டிய முத்தமிழ் விழா appeared first on Dinakaran.

Related Stories: