லாரி மீது அரசு பஸ் மோதல் கண்டக்டரின் கால் முறிந்தது

 

சேலம், ஜூலை 17: அரியலூரில் இருந்து மேட்டூருக்கு சாம்பல் ஏற்றிச் செல்ல ஒரு லாரி வந்தது. லாரியை டிரைவர் பூபதி ஓட்டிவந்துள்ளார். நேற்று அதிகாலை 3 மணிக்கு சேலம் கந்தம்பட்டி பைபாஸ் பகுதியில் லாரி வந்தது. அப்போது, லாரிக்கு பின்னால் கோவையில் இருந்து சேலம் நோக்கி அரசு பஸ் வந்தது. அரசு பஸ்சை எடப்பாடியை சேர்ந்த டிரைவர் குமார்(42) இயக்கி வந்துள்ளார்.

லாரியை பஸ் முந்தி சென்றது. அப்போது லாரி மீது பஸ் உரசியது. இந்த விபத்தில் பஸ் கண்டக்டரான அந்தியூரை சேர்ந்த ஜெகதீஸ்வரனின் கால் முறிந்தது. 8பயணிகளுக்கு காயம் ஏற்பட்டது. உடனே அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு காயமடைந்த பயணிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து சூரமங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post லாரி மீது அரசு பஸ் மோதல் கண்டக்டரின் கால் முறிந்தது appeared first on Dinakaran.

Related Stories: