தாய், தங்கைக்கு வெட்டு: பெயின்டர் தற்கொலை முயற்சி

பல்லாவரம்: பொழிச்சலூர், மல்லிமா நகர் பெரியார் தெருவை சேர்ந்தவர் சாந்தி (70). இவரது, கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்ட நிலையில், மகன் ராஜன் (38), மகள் பாக்கியலட்சுமி (27) ஆகியோருடன் ஒரே வீட்டில் வசித்து வருகிறார். மதுப்பழக்கத்திற்கு அடிமையான ராஜன், நேற்று முன்தினம் நள்ளிரவு போதையில் வீட்டிற்கு வந்துள்ார். இதை தாய் சாந்தி கண்டித்தார். இதனால் ஆத்திரமடைந்த ராஜன், வீட்டின் சமையல் அறையிலிருந்த கத்தியை எடுத்து வந்து, தாயை சரமாரியாக வெட்டினார்.

இதில் அவருக்கு தலை, கழுத்து, கை ஆகிய இடங்களில் வெட்டுக்காயம் ஏற்பட்டது. அவரது அலறல் சத்தம்கேட்டு ஓடிவந்த தங்கை பாக்கியலட்சுமி அலறி கூச்சலிட்டதால், அவரையும் சரமாரியாக வெட்டினார்.
பின்னர், ராஜன் தனக்குத்தானே தலையில் வெட்டிக் கொண்டு, தற்கொலைக்கு முயன்றார். பலத்த காயமடைந்த 3 பேரையும் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

 

The post தாய், தங்கைக்கு வெட்டு: பெயின்டர் தற்கொலை முயற்சி appeared first on Dinakaran.

Related Stories: