அவரை பற்றி தீவிரமாக விசாரிக்கவே அவர், மனைவியுடன் தலைமறைவானார். இதைதொடர்ந்து ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் அவர்கள் பதுங்கியிருப்பது தெரியவர தனிப்படை போலீசார் அங்கு சென்று தம்பதியை சுற்றிவளைத்து பிடித்தனர். விசாரணையில், அவர்கள், ஒடிசா மாநிலம் புவனேஸ்வரை சேர்ந்த அபினேஷ் சாகு (41), அவரது மனைவி அஸ்வின்பட்டில் (37) என்றும், காதல் திருமணம் செய்த இவர்கள் இருவரும் கர்நாடகா மாநிலம் பெங்களூரு அருகே பானத்தூர் பங்கனபள்ளியில் தங்கி பெங்களூரு ஐடி கம்பெனியில் பணியாற்றினர்.
இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகன் உள்ளான். ஓராண்டுக்கு முன்பு அபினேஷ்சாகு, தந்தை கார்த்திக்சந்திரசாகு நடத்தும் ஆதரவற்றோர் ஆசிரமத்திற்கு சென்று சுமைனா (15) என்ற சிறுமியை வீட்டு வேலைக்காக அழைத்து வந்துள்ளார். சம்பவத்தன்று அஸ்வின்பட்டிக்கு சிறுமி வெந்நீர் எடுத்த வந்தபோது கை தவறி அவரது மீது விழந்தது. இதில் ஆத்திரமடைந்த அவர் பூரிக்கட்டையால் சிறுமியை சரமாரியாக அடித்துள்ளார். இதில் சிறுமி மயங்கி சோர்வடைந்தாள். மாலையில் வீடு திரும்பிய அபினேஷ்சாகு மனைவியை திட்டிவிட்டு சிறுமி யை ஓய்வெடுக்கச்சொல்லிவிட்டு அபினேஷ்சாகு மறுநாள் பணிக்கு சென்றுவிட்டார்.
அதன்பின் அஸ்வின்பட்டில் சிறுமியிடம் வீட்டு வேலை செய்யும்படி கூறியுள்ளார். அப்போது கீழே விழுந்த சிறுமி இறந்துவிட்டார். இதனால் தான் சிறைக்கு செல்லவேன் என பயந்து சடலத்தை மறைத்துவிடுவோம் என கூறி கணவரை சம்மதிக்க வைத்துள்ளார். பின்னர் உடலை நிர்வாணமாக்கி சடலத்துடன் சூட்கேசை அடைத்து காரில் சேலம் கொண்டு வந்து வீசிவிட்டு தம்பதி ஒடிசாவில் பதுங்கியது தெரியவந்தது.
The post 15 வயது சிறுமியை கொன்று நிர்வாணமாக்கி சூட்கேசில் வீச்சு: பெங்களூருவில் இருந்து சேலம் வரை காரில் சடலத்துடன் பயணித்த ஐடி தம்பதி appeared first on Dinakaran.