ஈரோடு: ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறை பகுதியில் கடந்த 12ம் தேதி வாகன சோதனையில் போலீசார் பவானி போக்குவரத்து போலீஸ்காரர்கள் பிரபு மற்றும் சிவக்குமார் ஆகியோர் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த ஒரு சரக்கு வேனை நிறுத்தி சோதனை செய்ததில் 27 மூட்டைகளில் ரூ.1.50 லட்சம் மதிப்பிலான 295 கிலோ அளவில் குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் கடத்தி செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்காமல் 2 போலீஸ்காரர்களும் பிடிபட்ட வேனை ரகசியமாக நாமக்கல் மாவட்டம் வெப்படைக்கு கொண்டு சென்று ஒரு வீட்டில் பதுக்கி டிரைவரிடம் பேரம் பேசி உள்ளார். உடனே டிரைவர், தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த வேன் உரிமையாளர் ராஜேந்திரனுக்கு தெரிவித்து உள்ளார். இதுகுறித்து ஈரோடு எஸ்பி ஜவஹருக்கு போனில் தெரிவித்தார். எஸ்பி உத்தரவின்பேரில் போலீஸ்காரர்கள் பிரபு, சிவக்குமார் ஆகிய இருவரையும் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனர். விசாரணையில், பேரம் பேசி முறைகேட்டில் ஈடுபட்டது உறுதியானது. இதையடுத்து, போக்குவரத்து போலீஸ்காரர்களான பிரபு, சிவக்குமார் இருவரையும் சஸ்பெண்ட் செய்து ஈரோடு எஸ்பி ஜவகர் உத்தரவிட்டார்.
The post பறிமுதல் குட்கா பதுக்கி பேரம் 2 போலீஸ்காரர் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.