இந்நிலையில், நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலின்போது ஏப்ரல் 9ம் தேதி ஆற்காடு டிரஸ்ஸர் தோட்டம் தெருவில் அதிமுக வேட்பாளருக்கு வாக்கு சேகரித்துள்ளார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த சுகந்தி மற்றும் அவரது கணவர் மணி ஆகியோரிடம் ஏற்பட்ட வாக்குவாதத்தில் உதயகுமார் ஆத்திரமடைந்து, சுகந்தியை தாக்கி எனது கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் இல்லை என்றால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சுகந்தி ஆற்காடு டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து விசாரணை செய்து வந்தனர். இந்நிலையில், அதிமுக கவுன்சிலர் கே.உதயகுமாரை நேற்று போலீசார் கைது செய்தனர்.
The post பெண்ணை தாக்கி மிரட்டிய அதிமுக கவுன்சிலர் கைது appeared first on Dinakaran.