இதுகுறித்து சிதம்பரம் நகர போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில் குட்டிமாவுக்கும், கடலூர் முதுநகர் பகுதியைச் சேர்ந்த சிக்கந்தர் என்பவருக்கும் முகநூலில் பழக்கம் உள்ளதாகவும், இதன் அடிப்படையில் சிக்கந்தர் பைக் வாங்குவதற்கு பணம் தேவைப்பட்டதால், குட்டிமா தான் அணிந்திருந்த தங்கத் தாலியை அவரிடம் கழற்றி கொடுத்துவிட்டு குடும்பத்தாரை ஏமாற்றுவதற்காக மர்ம நபர் தாலியை பறித்துக்கொண்டு ஓடிவிட்டதாக நாடக மாடியது தெரியவந்துள்ளது. இதுகுறித்து குட்டிமாவின் கணவர் வாசுதேவன் கொடுத்த புகாரின்பேரில் மாயமான குட்டிமாவை போலீசார் தேடி வருகின்றனர்.
The post முகநூலில் பழகிய வாலிபருக்கு பைக் வாங்க தாலி செயினை கொடுத்துவிட்டு வழிப்பறி நாடகமாடிய இளம்பெண் appeared first on Dinakaran.