சென்னை ரயில்வே பொது மேலாளர் R.N.சிங் உடன் எம்.பி., சசிகாந்த் செந்தில் சந்திப்பு

சென்னை: சென்னை ரயில்வே பொது மேலாளர் R.N.சிங்கை எம்.பி., சசிகாந்த் செந்தில் சந்தித்து பேசினார். அப்போது; திருவள்ளூரில் புதிய கோச்சிங் டெர்மினல் நிறுவ வேண்டும். கும்மிடிப்பூண்டி-சென்னை மத்திய புறநகர்ப் பிரிவை மேம்படுத்த வேண்டும். வேகமான லூப் லைன்களை அறிமுகப்படுத்த வேண்டும். முக்கிய அதிவேக விரைவு ரயில்களுக்கான நிறுத்தங்களை திருவள்ளூரில் ஏற்படுத்த வேண்டும்.

பண்டிகை காலங்களில் இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் அனைத்தையும் திருவள்ளூர் ரயில் நிலையத்தில் நிறுத்த வேண்டும். திருவள்ளூரில் சில ரயில் நிலையங்களில் மேற்கூரைகள் அமைக்க வேண்டும். திருவள்ளூர் முழுவதும் பெரும் பிரச்னையாக உள்ள இருப்புப்பாதை சந்திக் கடவு, சுரங்க பாதை கட்டமைக்க மற்றும் சீரமைக்க வேலைகளை தீவிரப்படுத்த வேண்டும். என திருவள்ளூர் தொகுதியில் ரயில்வே தொடர்பான கோரிக்கைகளை முன்வைத்தார்.

The post சென்னை ரயில்வே பொது மேலாளர் R.N.சிங் உடன் எம்.பி., சசிகாந்த் செந்தில் சந்திப்பு appeared first on Dinakaran.

Related Stories: